ஒவ்வொருவரும் தமக்குள் ஒலிந்திருக்கும் ஆற்றல்களையும் திறமைகளையும் இனங்கண்டு அவற்றை வளர்த்துக்கொள்ளும் பட்சத்தில் வேலைவாய்ப்பு உங்களைத் தேடிவரும்.
அத்துடன், மனதையும், உள்ளத்தையும் கட்டுப்பாடாக வைத்திருந்தால் இறைவனுடைய அருள் மட்டுமன்றி, எந்தத்துறையிலும் உச்சத்தை எட்ட முடியும்.
மனிதன் தன்னுடைய பிறப்பு முதல் இறப்பு வரையுள்ள காலத்தில் மிக முக்கிய காலமான இளமைப் பருவத்தை பயனுள்ள வகையில் பயன்படுத்திக்கொள்ளவேண்டும்.
தமக்குப் பொருத்தமான சுயதொழில் ஒன்றைத் தொடங்கவேண்டும் என ஒவ்வொரு இளைஞனும் சிந்திக்கவேண்டும். தோல்விகள் பற்றி கவலைப்படுதைவிட்டு என்னால் மீண்டும் வெற்றியடைய முடியும் என்ற எண்ணத்துடன் செயற்பட்டால் வெற்றி நிச்சயம்.
மேலும், உலகில் மிகவும் பண பலம் படைத்த அமெரிக்கரான பில்கேட்ஸ் பல்கலைக்கழக வாய்ப்பு கிடைத்தும், சொந்தமாக தொழில் செய்ய வேண்டும் என எண்ணியதாலேயே அவர் இன்று உலகின் பணக்காரர் வரிசையில் முதலாவது இடத்தில் உள்ளார்.
Posted from WordPress for BlackBerry.